Ethirneechal September 26 Promo As we speak Episode Replace

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஞானமும் கதிரும் அசதியில் தூங்கி விடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து சாமியாருடன் வந்த குணசேகரன் தம்பிகளை எழுப்ப வேண்டாம் நான் சொல்வதை மட்டும் அவர்களிடம் சொல்லுங்கள் என சொல்லிவிட்டு தன்னுடைய ஞாபகமாக தம்பிகளுக்கு இருக்கட்டும் என சொல்லி தன்னுடைய செருப்பை விட்டுச்செல்கிறார் குணசேகரன். 

 

அவர்கள் இருவரும் எழுந்ததும் அந்த சாமியாரிடம் “எங்க அண்ணன்?” எனக் கேட்க அவர் “உங்க அண்ணன் வந்தார் உங்களிடம் சொல்ல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். உங்களை எழுப்ப அவர் விரும்பவில்லை. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் இதைப் பாருங்கள் ஆதாரம்” என சொல்லி செருப்பைக் காட்டுகிறார் அந்த சாமியார். 

“வரும் ஊர் திருவிழாவை சிறப்பாக செய்யச்சொல்லி சொன்னார். அந்தத் திருவிழாவுக்கு கண்டிப்பாக ஜீவானந்தமும் உங்க அப்பத்தாவும் வரவேண்டும். உங்க அண்ணன் அன்று வரும் போது அவர்கள் இருவரும் உயிருடன் இருக்க கூடாது. என்னுடைய தம்பிகள் என்றால் இதை அவர்கள் செய்ய வேண்டும் என சொல்லச் சொன்னார்” என கதிரிடம் சாமியார் சொல்கிறார். 

 

நந்தினி முதியோர் இல்லத்துக்கு தயார் செய்து வைத்திருந்த உணவுகளை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராக இருந்த சமயத்தில், ஞானமும் கதிரும் வீட்டுக்கு வர அவர்கள் பாத்திரங்கள் அனைத்தையும் ஒளித்து வைத்து விடுகிறார்கள். 

அண்ணனை பார்க்கப் போன இடத்தில் நடந்த அனைத்து விஷயத்தையும் பற்றி ஞானம் அனைவரிடமும் சொல்கிறான். கதிர் சமயலறைக்கு சென்று “எங்க அண்ணன் இன்னும் ஒரே வாரத்தில் வந்து விடுவார். அதுக்குப் பிறகு உங்க எல்லாருக்கும் இருக்கு” என மிரட்டி விட்டு செல்லும் போது, சேமித்து வைத்திருந்த பாத்திரங்களை பார்த்து விடுகிறான். நந்தினி திருதிருவென முழிக்க கதிர் அவர்களை முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

“எங்கப் போகுது இந்த சோறெல்லாம்?” என கதிர் நந்தினியிடம் கேட்க, விசாலாட்சி அம்மா “நான் சொல்கிறேன்” என சொல்லி உண்மையை உடைத்து விடுகிறார். நந்தினியை சண்டையிட்டு உணவை எடுத்துச் செல்லவிடாமல் செய்துவிடுகிறான் கதிர். 

முதியோர் ஹோமில் இருந்த மேற்பார்வையாளர் வந்து நந்தினியிடம் “கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க. அதுக்கு யார் பதில் சொல்றது?” என வீட்டுக்கு வந்து கத்துகிறார். அழுதுகொண்டே நந்தினி “அந்த அட்வான்ஸ் காசு தானே மேடம் இதை எடுத்துட்டு போங்க” எனச் சொல்லி தந்து தாலி செயினை கழட்ட, விசாலாட்சி அம்மா “நிறுத்துடி! குத்துக் கல்லாட்டம் உன்னோட புருஷன் இருக்கான், தாலிய கழட்டுற” என ஆவேசப்பட “அவங்க மரியாதை கொடுத்தா நாங்களும் கொடுப்போம்.

 

என்னை பொறுத்த வரைக்கும் இது வெறும் செயின் தான்” எனக் கோபத்தில் கொந்தளிக்கிறாள் நந்தினி. “அதுக்காக அறுத்து போட்டுடுவியா?” என விசாலாட்சி அம்மா கேட்க “ஆமா போட்டுவேன்” என சொல்ல, விசாலாட்சி, அம்மா நந்தினியை கைநீட்டி பளார் என அறைந்து விடுகிறார். 

 

வெண்பா தாராவுடன் வருவதைப் பார்த்த கதிர் ஈஸ்வரியிடம் “ஆமா இது யாரு?” எனக் கேட்கிறான். “உனக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என சொல்ல, கதிர் பயங்கரமாக ஈஸ்வரியிடம்  சண்டையிடுகிறான். அதை ஜனனியும் ரேணுகாவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles