<robust>Kerala Rain: கனமழை அபாயம்… கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்</robust>

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோட்டையம், பாலக்காடு, திருவணந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவணந்த பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் படிக்க

<robust>Sachin Reward: புதிய மைதானத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு சச்சின் அளித்த ஸ்பெஷல் பரிசு.. என்ன தெரியுமா?</robust>

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மைதானத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின்போது பிரதமர் மோடிக்கு சச்சின் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார். ‘நமோ’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது. மேலும் படிக்க

<robust>ஊழல் வழக்கில் போலீஸ் கஸ்டடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய சந்திரபாபு நாயுடு.. அடுத்து என்ன?</robust>

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். மேலும் படிக்க

<robust>Varanasi Cricket Stadium: வாரணாசியில் பிரம்மாண்டம்.. சிவனை பிரதிபலிக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்</robust>

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, ஆயிரத்து 115 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார். அதோடு, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.450 கோடியில் சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைய உள்ளது. இந்த மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் படிக்க

<robust>இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் முயற்சி செய்கிறோம்: மனம் திறந்த பிரதமர் மோடி</robust>

முக்கியான நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குடியரசு தினம் மற்றும் உச்ச நீதிமன்ற தொடக்க தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் 9,423 தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றம் பதிவேற்றியது. இந்த நிலையில், இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் மத்திய அரசு முயற்சி செய்து வருதவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், "சட்டங்களை எழுத, நீதித்துறை செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மொழி நீதியை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது" என்றார். மேலும் படிக்க