மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் விஜய் ஆண்டனி

மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் விஜய் ஆண்டனி

24 செப், 2023 – 11:58 IST

எழுத்தின் அளவு:


Vijay-Antony-will-participate-in-the-shooting-again

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, ‛என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

திடீரென மகள் இறந்ததால் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புது இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles