பால் வகை இனிப்பு பொருட்களை அனைவருமே விரும்பி உண்ணுவோம். பாலை கொண்டு, பால்கோவா, ராசபாலி, பால் கேக், பால் கொழக்கட்டை, பால் பாயசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். பாலின் சுவை அலாதியானது அதனால் தான் அதிகமான இனிப்பு வகைகளில் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
பால் வகையில் இனிப்புகள் செய்வதற்கு எளிமையாகவும் அதிக சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. அதனால் தான் பால் வகை இனிப்புகள் பிரபலமானதாக இருக்கின்றன. நீங்கள் புதிது புதிதாக ஏதேனும் ரெசிபிகளை முயற்சிப்பதில் ஆர்வமுடையவரா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் சாய்ஸ் இது. ஆம் இப்போது நாம் பாலில் ஒரு இனிப்பு வகையை செய்ய போகின்றோம். வாங்க திரட்டி பால் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இதன் சுவை பால்கோவாவை போன்று இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் – 4 கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,பாதாம் – சிறிதளவு
செய்முறை
முதலில் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கனமான அடிப்பாகம் கொண்ட வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். பாலை இடைவிடாது கிளறி விட்டுக் கொண்ண்டே இருக்க வேண்டும். பால் நன்றாக கொதித்து சற்று கெட்டியாகி, திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை பாலுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பாலுடன் சர்க்கரை சேர்த்து கிளரிக்கொண்டே இருக்கும் போது, உதிரி உதிரியாக கட்டியாக பால் திரண்டு வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி திரட்டுப் பாலை சூடாகவே சாப்பிடலாம். ஆறிய பின்பும் சாப்பிடலாம். இதை பரிமாரும் போது இதன் மீது நறுக்கிய பதாம் பருப்புகளை கொண்டு அலங்கரித்துக் கொடுக்கலாம். இதன் சுவை பால்கோவாவை போன்றே இருக்கும்.
குறிப்பு
திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து கருகி விடும். பால் காய்ச்சும் பாத்திரத்தில் முன்னரே இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பின் பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவதன் மூலம், பால் அதிகமாக பாத்திரத்தில் ஒட்டாமல் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
TN Governor Speech: “இந்தியாவிற்கு அறிமுகம் தேவை.. பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவி
Hearth Accident: திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து; இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம்