Ethirneechal September 22 Episode Replace

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் வெண்பாவை பற்றி யோசிக்கும் போது ஈஸ்வரி வெண்பாவை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்ல ஜீவானந்தம் சரி சொல்லிவிடுகிறார். வெண்பாவும் ஈஸ்வரியின் செல்வதை நினைத்து சந்தோஷமாகிறாள். 

வீட்டில் ரேணுகாவும் நந்தினியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். “ஜான்சி ராணியை குணசேகரன்தான் ஏவிவிட்டு இருப்பார். இது அவருடைய புதிய பிளானாக கூட இருக்கலாம்” என நந்தினி சொல்கிறாள். ”அவ எதையாவது செய்யட்டும். நீ அவளுக்கு சரிசமமா பேசி உன்னையே ஏன் நீ அசிங்க படுத்திக்காத. அப்பத்தா சொன்ன மாதிரி நாம விறுவிறுன்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போகணும்” என சொல்கிறாள் ரேணுகா. இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த ஜான்சி ராணி அதை போய் விசாலாட்சி அம்மாவிடம் வத்தி வைக்கிறாள். 

நந்தினியும் ரேணுகாவும் பேசியதை திருச்சு பேசி விசாலாட்சி அம்மாவை ஏத்தி விடுகிறாள். “இவளுங்களால தான் அண்ணன் இந்த வீட்டை விட்டுட்டு போனாரு. அதை பத்தி கவலையில்லாம அப்பத்தா சொன்னதை போல அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்கிட்டே இருக்கணுமாம் அது என்ன கட்டமுன்னு கேட்டு சொல்லுங்க” என்கிறாள் ஜான்சி. 

“இந்த முடிச்சு போடற வேலையெல்லாம் இங்க வைச்சுக்காத. எங்க அத்தை கிட்ட சொல்லிட்டு தான் நான் எல்லாத்தையும் செய்யுறோம். மரியாதை கெட்டு போயிடும்” என சொல்கிறாள் நந்தினி. “என்னடி அடுத்த கட்டம். என்னோட பிள்ளையை காணும்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு இது வசதியா இருக்கா. இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க” என சொல்லிக்கொண்டு இருக்கிறார் விசாலாட்சி அம்மா. 


அந்த நேரத்தில் கார் ஒன்று வர கரிகாலன் “ஐயோ அத்தை அடுத்த இடி வருது” என்கிறான். வெண்பாவுடன் ஈஸ்வரி வந்து இறங்குகிறாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ‘யாருடி இந்த பொண்ணு?‘ என விசாலாட்சி அம்மா கேட்கிறார். “இவ பெயர் வெண்பா. என் பிரெண்டோட குழந்தை. அவளுடைய கணவருக்கு உடம்பு சரியில்லை என துபாய்க்கு போயிருக்கா. அதனால கொஞ்ச நாள் வெண்பா நம்ம கூட இங்க இருக்கட்டும்” என்கிறாள் ஈஸ்வரி. 

“இத்தனை நாள் வீட்ல அடைஞ்சு கிடந்த. இப்போ எங்க இருந்து வந்தா இந்த  பிரெண்டு. அன்னிக்கு என்னனா என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம அவமான படுத்தின. இன்னைக்கு ஏதோ ஒரு குழந்தையை கூட்டிட்டு வந்து நிற்கிற” என திட்ட, “அவங்களை திட்டாதீங்க. உங்களுக்கு நான் இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் போயிடுறேன். அவங்களை திட்டாதீங்க” என வெண்பா சொல்லவும் விசாலாட்சி அம்மா “பதினைந்து நாள்தான். அத்தோட உன்னோட ஆட்டத்தை முடிச்சுக்க” என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். 

இளவேனில் ஜீவானந்தத்திடம் “கௌதம் உங்க மனைவியை கொலை செய்தவனை பழிவாங்க போகிறேன் என கிளப்பி விட்டான்” என சொல்கிறாள். ஜீவானந்தம் அவனை யார் இந்த தேவையில்லாத வேலையை செய்ய சொன்னது என திட்டுகிறார். போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளான். “இதுல நீங்க தலை இடாதீங்கன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்லையா” என்கிறார் ஜீவானந்தம். கெளதம் வந்தால் தகவல் சொல்ல சொல்கிறார். 


வெண்பாவுடன் அனைவரும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்கிறான் கரிகாலன். அவனை ரேணுகா விரட்டி விடுகிறாள். அப்போது தாராவும், ஐஸ்வர்யாவும் ஸ்கூலில் இருந்து வருகிறார்கள். அனைவரும் ஒன்றாக பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்  கரிகாலன். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles