லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தின் இசைவெளியீடு இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
லியோ
விஜய் , த்ரிஷா, சஞ்சய் தத். அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் மீது குவிந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லியோ புதிய போஸ்டர்
Hold calm and keep away from the battle 🧊#LeoTeluguPoster #LEO 🔥🧊 pic.twitter.com/8fqLMFRT73
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 17, 2023
இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நான் ரெடிதான் பாடல் மற்றும் அந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் கதாபாத்திரங்களின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அடுத்த அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள். இந்நிலையில் லியோ படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என சைமா விருது விழாவில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த மாதம் முழுவதும் லியோ படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து நேற்று லியோ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இசைவெளியீடு எப்போ?
லியோ படத்தின் இசைவெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு என தனிப்பட்ட சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி விஜய் மக்கள் இயக்கத்தில் சார்பாக மாவட்ட வாரியாக 50 நபர்களை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க தேர்வு செய்ய இருப்பதாகவும் கூட்ட நெரிசலில் எந்த விதமான பிரச்சனையும் நிகழாதபடி பார்த்துகொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசைவெளியீடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தளபதி 68
லியோ படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 68. இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் இருக்கும் இந்தப் படத்திற்கான தொடக்க கட்ட வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : அண்ணாமலை தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – ஜெயக்குமார் ஆவேசம்!
Vinayagar Chaturthi 2023: மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு