Leisure Headlines As we speak September 18 Tamil Cinema Information TTF Vasan Jayam Ravi Nayantara HBD Vignesh Shivan

  • இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் – சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து 

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல், ஆந்தாலஜி படமான பாவக்கதைகள் என தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை வழங்கி வருகிறார். இதனிடையே நடிகை நயன்தாராவை காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் படிக்க

  • மீண்டும் சோலோ… மண்ணாங்கட்டிப் படத்தின் போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் அவர் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார். மேலும் கதையின் நாயகியாகவும் சோலோ பெர்பாமன்ஸில் கலக்கி வரும் நயன்தாரா, அடுத்ததாக ‘மண்ணாங்கட்டி’ என்னும் படத்தில் நடிக்க உள்ளார். டூட் விக்கியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • ஜெயம் ரவி படம் மூலம் கம்பேக் கொடுக்க தயாரான ராஜேஷ்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ப்ரதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன், பூமிகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் நிலையில், இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நகரம் மற்றும் கிராமம் இரு நிலங்களை பின்னணியாக வைத்து போஸ்டர் உருவாகியுள்ளது. மேலும் படிக்க

  • திடீரென விமான நிலையத்தில் பின்தொடர்ந்த நபர்.. மிரண்டு போன ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ..!

மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் பின் தொடர்ந்ததால் நடிகை ஸ்ருதிஹாசன் எரிச்சலடையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தனது காரைத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்நேரம் ​​கருப்புச் சட்டையும் நீல நிற ஜீன்ஸூம் அணிந்திருந்த ஒரு நபர் தன்னுடன் வரும் குழுவினருடன் இணைந்து வருவதை ஸ்ருதி ஹாசன் கவனித்தார். இந்த சூழ்நிலை அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், கடைசியில் “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, சார்” என்று ஸ்ருதிஹாசன் கூறினார். மேலும் படிக்க

  • ‘பொதுமக்கள் கொல்லப்பட்டால் என்ன செய்வது?’ .. TTF வாசனை கண்டித்த லியோ பட பிரபலம்..!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் காயமடைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளது. பைக் சாகசம் உள்ளிட்டவற்றை செய்து இளைஞர்களை ஆபத்தான பாதைக்கு அழைக்கிறார் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது டிரைவிங் லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்படியான நிலையில் இயக்குநர்  ரத்னகுமார், TTF வாசன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “உங்கள் மலிவான துணிச்சலை காட்ட இப்படி செய்யும்போது பொதுமக்கள் கொல்லப்பட்டால் என்ன செய்வது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் படிக்க மேலும் படிக்க

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles