33% Girls Reservation: மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு; பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

<p>இன்று அதாவது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்ற ஒப்புதல் அளித்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp; பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. 33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. &nbsp;</p>
<p>தற்போது நடைபெற்று வரும் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இது தொடர்பான மசோதா மாநிலங்களைவையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles