தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் குழந்தைகள் உட்பட 30க்கு மேற்பட்ட பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- விநாயகர் சதுர்த்தி எதிரொலி – ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை

மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏ.டி.எஸ்., கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி முழுவதிலும் உள்ள நகர் புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 க்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 11 குழந்தைகள் அடங்குவர், இதேபோன்று மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 20 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பதினோரு குழந்தைகளில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மதுரை மாநகராட்சி பகுதியில் இன்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதிலும் 70-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மாவட்ட முழுவதும் இன்று ஒரே நாளில் 15 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அவர்களுடைய இரத்த மாதிரி ELISHA சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

இதைப் படிக்க மிஸ் பாஸ் – கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் – Magalir Urimai Thogai: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய வரலாறு படைத்துள்ளார் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் !