Vijay Met His Father S A Chandrasekhar Who Undergone Surgical procedure As Quickly As Return From US Shoba Chandrasekhar Particulars

நடிகர் விஜய் – வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்துக்காக முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில்,  இப்பட பணிகளுக்காக அமெரிக்காவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய்

விஜய் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த வாரங்களில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன் பங்குக்கு புகைப்படங்கள் பகிர்ந்து விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவரது ஏர்போர்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

வைரலான எஸ்.ஏ.சி ஆடியோ

இதனிடையே, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் வெளியானது. அதில் தனக்கு ஏதோ உடல்நலக்குறைவு என்றும், மருத்துவர் அறிவுரையின்படி தான் ஸ்கேன் செய்து பார்த்ததுடன், இரண்டே நாள்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஸ்கேன் செய்ததால் பிரச்னையை கண்டுபிடித்து தான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இது நல்ல விஷயம் நம் மனதை பாசிட்டிவ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.ஏ.சி இந்த ஆடியோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது…

இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய தன் தந்தை மற்றும் தன் தாய் ஷோபாவை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை என தகவல்கள் வந்த நிலையில், இந்தப் புகைப்படம் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சூர்ய வம்சம் க்ளைமேக்ஸ் போல் இப்புகைப்படம் வெளியாகி தங்களை மகிழ்வித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles