இணையும் தயாரிப்பு நிறுவனங்கள் – Affiliated Movie Manufacturing corporations

இணையும் தயாரிப்பு நிறுவனங்கள்

01 செப், 2023 – 12:47 IST

எழுத்தின் அளவு:


பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதை போன்று இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரே படத்தை தயாரிக்கும் டிரண்ட் எப்போதோ வந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது தொடங்கி உள்ளது.

தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ (தமிழ்), ராஷ்மிகா நடிக்கும் ‘ரெயின்போ’ (தெலுங்கு) திரைப்படங்களை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. மற்ற இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது “இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles