CSK’s Street To IPL 2023 Winner: Chennai Tremendous Kings The Path Traversed Title Winner Oh Ipl 2023

கடந்த 2022 ம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா தலைமையில் அணியானது களமிறங்கியது. எதிர்பாராத அளவில் அந்த 15வது சீசனில் சென்னை அணி முதல் பாதியில் சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து மீண்டும் எம்.எஸ்.தோனியிடமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் லீக் சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்தது. 

லீக் போட்டியின் முடிவில் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பியபோது, தற்போதைய சூழ்நிலையில் அதை பற்றி யோசிக்கவில்லை. அடுத்த வருடம் மீண்டு வருவோம் என தெரிவித்தார். 

2023: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ம் ஆண்டு களமிறங்கியபோது, ஏகப்பட்ட சிக்கல்களுடனே சீசனை தொடங்கியது. கைல் ஜேமிசன், முகேஷ் சௌத்ரி என முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் தொடரிலிருந்து விலகினர். அதன்பிறகு தீபக் சாஹர் மற்றும் மஹாலா போன்ற பந்துவீச்சாளர்கள் காயத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. இதையடுத்து, தோனி முழுக்க முழுக்க துளியும் அனுபவம் இல்லாத இளம் பந்துவீச்சாளர்கள் நம்பியே பயணத்தை இனிதே தொடங்கினார். 

பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை ருதுராஜ் – கான்வே காம்போ கடந்த ஆண்டே வெற்றிகரமான கூட்டணியாக பார்க்கப்பட்டது. ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, ரஹானே,ஜடேஜா என்ற பேட்டிங் ஆர்டர்தான் தோனிக்கு வலுசேர்க்க காத்திருந்தனர். 

முதல் போட்டி – குஜராத் அணியிடம் தோல்வி: 

ஐபிஎல் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை துரத்தில் ஐபிஎல் 2023 சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணியில் சுப்மன் கில்லே 63 ரன்கள் எடுத்திருந்தார். 

லக்னோவுக்கு எதிராக பேக் டூ ஃபார்ம்:

குஜராத் அணியின் தோல்விக்கு பிறகு, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான சென்னை அணி லக்னோ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்து அசத்தியது. 218 ரன்கள் இலக்காக களமிறங்கிய லக்னோ அணிக்கு மொயீன் அலி எமனாக இருந்தார். அட்டகாசமாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்ற, இறுதியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை அணியை சொந்த மைதானத்தில் வைத்து கதம்: 

சென்னை அணி தனது 3வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஹா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சென்னை அணிக்காக இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் அடிக்க, சென்னை அணி 11 பந்துகள் மீதமிருக்க 158 ரன்களை துரத்தி வெற்றிபெற்றது. 

சந்தீப் சர்மாவின் யார்க்கர்: 

தொடர்ந்து இரண்டு வெற்றிகளுக்கு பிறகு, சென்னை மீண்டும் சேப்பாக்கத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிஙில் களமிறங்கிய ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் கண்ட சென்னை அணி 113 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தபோது, சென்னை அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 

அந்தநேரத்தில், தோனி ஏழு பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, கடைசி  4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவர் வீசிய சந்தீப் சர்மா முதல் மூன்று பந்துகளில் 14 ரன்களை விட்டுகொடுக்க, அடுத்த மூன்று பந்தில் அற்புதமாக 3 யார்க்கர்கள் வீசி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிபெற செய்தார். 

பெங்களூருவை பந்தாடிய சென்னை: 

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, டெவான் கான்வேயின் 83 ரன்களால் 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு 12 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்தது. கடைசி 8 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பதிரனா மூன்று ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி சென்னை அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். 

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக எளிதான வெற்றி: 

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக முறையே 7 விக்கெட்கள் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை அணி, 7 போட்டிகளில் 5 வெற்றிகளுர்டன் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. 

தொடர் தோல்வி: 

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளிடம் அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்ந்தது. இந்த தொடச்சியான தோல்விகளுக்கு பிறகு, லக்னோ அணிக்கு எதிரான போட்டி  மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 

இரண்டு வெற்றி, ஒரு தோல்வி: 

எம்.எஸ். தோனி தலைமையிலான அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் மும்பை, டெல்லி அணிகளை வீழ்த்தி, கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

டெல்லிக்கு எதிராக வெற்றி: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் சந்தித்தது. இதில், சென்னை அணி கட்டாய வெற்றிக்காக காத்திருந்தது. இந்த போட்டியில் டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்காக காத்திருந்தது. 

மும்பை தனது கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெறாததால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சென்னை, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. 

குவாலிஃபையர் 1 : 

குவாலிஃபையர் 1 சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த குஜராத் அணியும், 2வது இடத்தில் இருந்த சென்னை அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. 

173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின்மூலம் சென்னை நேரடியாக இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்தது. 

குவாலிஃபையர் 2 ல் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 

இறுதிப்போட்டி:

குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடந்த மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தார். 

சென்னை அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரவு 12.10 மணிக்கு போட்டி தொடங்கியது. 

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு 15 வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டைக்கில் இருந்த ஜடேஜா, மோகித் சர்மா பந்தில் 6 மற்றும் 4 ரன்களை பறக்கவிட சென்னை அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 5வது முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பை வென்று சாதனை படைத்தது. 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles