In accordance To The Meteorological Division, Rains Will Proceed In Tamil Nadu For The Subsequent 4 Days Due To The Low Atmospheric Circulation And Warmth Wave Prevailing Over Tamil Nadu.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 1ஆம் தேதி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

29.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சிவகங்கை, எலந்தகுட்டை மேடு (ஈரோடு மாவட்டம்) தலா 4, குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம்), ஹரூர் (தருமபுரி மாவட்டம்), பேரையூர் (மதுரை மாவட்டம்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), கரியகோவில் அணை (சேலம் மாவட்டம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), கிருஷ்ணகிரி, முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) 3, கேஆர்பி அணை, தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி மாவட்டம்), கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்), ஈரோடு (ஈரோடு மாவட்டம்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான  மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

31.05.2023 மற்றும் 01.06.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள்,  குமரிக்கடல் பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

OPS: “படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோவிலா..?” தி.மு.க. அரசை விளாசிய ஓ.பன்னீர்செல்வம்..! என்ன காரணம்?

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles