தங்கத்தில் மின்னும் கார்த்தி… ஜப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு | japan film launch date introduced

நடிகர் கார்த்தியின் திரையுலக பயணத்தில் கடந்தாண்டு சிறப்பாக அமைந்தது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என அவர் நடித்த 3 படங்களுமே ஹிட்டடித்தன. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகனுடன் இணைந்து ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையை பொறுத்தவரை, தங்க கட்டி, தங்கப் பல், தங்க துப்பாக்கி, தங்க சட்டை என முழுக்க தங்கமாகவே ஜொலிக்கிறார் கார்த்தி. பார்க்க வித்தியாசமாக இருக்கும் கார்த்தியின் இந்த லுக் கவனம் ஈர்த்து வருகிறது.

இன்று காலை 11 மணிக்கு ஜப்பான் யார் என்பது குறித்து அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,790FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles