‘எந்தப் பறவையும் பறக்க மாட்டேன்னு கூட்டுல இருக்குறது இல்ல’ – கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ டீஸர் | Aishwarya Rajesh Farhana Teaser Catches Consideration

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு அந்தப் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வேலைக்கு செல்லும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் எதார்த்த வாழ்வை இந்தப் படம் பிரதிபலிக்கும் என தெரிகிறது. ‘எந்தப் பறவையும் பறக்க மாட்டேன்னு கூட்டுல இருக்குறது இல்ல’ என்பது மாதிரியான பெண் சுதந்திரம் குறித்து அழுத்தமாக பேசும் வசனங்களும் இந்த டீஸரில் இடம் பெற்றுள்ளன. டீஸர் வீடியோ லிங்க்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles