அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்டவை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு, உயிரிழந்த பணியாளர் குடும்பத்தினர் என 3 ஆயிரத்து 414 பேருக்கு நிதி வழங்கவும், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.