கங்கனாவுடன் எனக்கு பிரச்சினை இல்லை – டாப்ஸி விளக்கம் | I’ve no drawback with Kangana Ranaut says Taapsee Pannu

‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. தெலுங்கிலும் நடித்துள்ள அவர் இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், சரியான உணவு முறைகளை பின்பற்றுவதற்காக தனது டயட்டீஷியனுக்கு மாதம் ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார்.

நடிகை கங்கனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டாப்ஸியிடம், கங்கனா ரனாவத்தை நேரில் சந்தித்தால், என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “கங்கனாவை பார்த்தால் வணக்கம் சொல்வேன். அவருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்குதான் என்னுடன் பிரச்சினை இருக்கிறது. அது அவரது விருப்பம். அவர் என்னை என்ன சொன்னாலும், அதை எனக்கான பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.

கங்கனாவும், டாப்ஸியும் வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையாக மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles