Chief Minister Stalin Condoles The Loss Of Lives Of Theni Military Jawan In Helicopter Crash In Arunachal Pradesh

அருணாசல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்தனர்.  

இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது அருணாச்சல பிரதேசத்தின்  மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் இரங்கல்:

அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் உடல்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், மேஜர் ஜெயந்த் வீர மரணத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,


அருணாசலப் விபத்தில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவ வீரர் மேஜர், ஜெயந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் அவர்களுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக இராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதியமைச்சர் இரங்கல்

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் விமானிகள் லெப்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles