நடிகர் ரோபோ சங்கர் அடையாளம் தெரியாத வகையில் உடல் இளைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரையில் தன் பயணத்தைத் தொடங்கி, தற்போது தொலைக்காட்சி உலகில் வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பிற சேனல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் எனக் கலக்கிய ரோபோ சங்கர், 2011ஆம் ஆண்டு ஜீவா நடித்த ’ரௌத்திரம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடிப் பேசவும், மாரி என பல திரைப்படங்களின் மூலம் கவனமீர்த்து வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக வலம்வரத் தொடங்கினார். மேலும் தந்தையைப் போலவே இவரது மகள் பாண்டியம்மா கடந்த 2019ஆம் ஆண்டு பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் அறிமுகமாகி அசத்தினார்.

இறுதியாக இந்த ஆண்டு கோடை எனும் படத்தில் ரோபோ சங்கர் தலை காண்பித்தார். இந்நிலையில், முன்னதாக ரோபோ சங்கர் உடல் இளைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

முன்னதாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரோபோ சங்கர் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்து 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது பேசுபொருளானது.

அத்துடன் மீட்கப்பட்ட அந்த கிளிகளை கிண்டியில் உள்ள நேஷனல் சிறுவர் பூங்காவில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

முன்னதாக ரோபோ சங்கரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது சோசியல் மீடியாக்களில் கூண்டில் அடைக்கப்பட்ட இரு அலெக்ஸாண்ட்ரின் கிளிகளுக்கு தங்கள் வீட்டில் உணவு அளிப்பது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், வீட்டை ஆய்வு செய்து இரண்டு கிளிகளையும் கைப்பற்றி அபராதம் விதித்தனர்.