முதல் 3 நாட்கள் முதல் மனைவியுடன், அடுத்த மூன்று நாட்கள் மற்றொருவருடன்.. அக்ரிமெண்ட் போட்ட பெண்கள்

ஒரே நபரை திருமணம் செய்து கொண்டுள்ள இரண்டு பெண்கள், அவருடன் எப்படி வாழ்வது என்பது குறித்து ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஒப்பந்தம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. அதன்படி, வாரத்தின் முதல் மூன்று நாள்கள் முதல் மனைவியுடனும் இரண்டாவது மூன்று நாள்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ கணவனும் இரண்டு மனைவிகளும் ஒப்பு கொண்டுள்ளனர்.

<sturdy>அதிர்ச்சி தந்த பெண்கள்:</sturdy>

இதில், அதிர்ச்சி தரும் ஒரு செய்தி என்னவென்றால், ஏழாவது நாளில் அந்த ஆண், அவர் விரும்பும் பெண்ணுடன் வாழ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் போது குவாலியரில் தனது முதல் மனைவியை விட்டுச் சென்றுள்ளார் அந்த நபர். அவர் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து, குருகிராமில் சக பெண் ஊழியரை அந்த நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

<sturdy>நடந்தது என்ன?</sturdy>

அவரது முதல் திருமணம் 2018 இல் குவாலியரைச் சேர்ந்த பெண்ணுடன் நடந்தது. அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். கோவிட் சமயத்தில், அவர் தனது மனைவியை பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் குருகிராமுக்குச் சென்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு வரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவியை அழைத்துச் செல்ல அவர் திரும்பாததால். முதல் மனைவிசந்தேகமடைந்து அவரது குருகிராம் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு, தனது கணவர், சக பெண் ஊழியரை மணந்துள்ளார் என்பதும் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையே ஒரு பெண் குழந்தை பிறந்ததும் அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த நபருடன் முதல் மனைவி பகிரங்கமாக சண்டையிட்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளார். பின்னர், அவர் குவாலியரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

பின்னர், அவரது கணவர் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்க முயற்சித்த போதிலும், அந்த நபர் இரண்டாவது பெண்ணை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். அவரது மனைவிக்கும் இரண்டாவது பெண்ணுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டதுப. ஆனால். அவர்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை.

<sturdy>உடன்படிக்கை:</sturdy>

பின்னர், மூவரும் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதன்படி, ஆண் தனது மனைவியுடன் வாரத்தில் மூன்று நாட்களையும், தான் திருமணம் செய்ததாகக் கூறப்படும் பெண்ணுடன் அடுத்த மூன்று நாட்களையும் ஞாயிற்றுக்கிழமை தனக்கு விருப்பமான பெண்ணுடன் வாழலாம் என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நபர், தனது மனைவிக்கும் மற்ற பெண்ணுக்கும் குருகிராமில் தலா ஒரு பிளாட்டை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவர்களின் ஒப்பந்தத்தின்படி அவர்களுடன் தனது சம்பளத்தை சமமாக பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், வழக்கறிஞர் ஹரிஷ் திவான் அவர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்து சட்டத்தின்படி சட்டவிரோதமானது என விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles