‘எ வெங்கட் பிரபு ஹன்ட்’ – ‘கஸ்டடி’ டீசர் எப்படி? | Venkat Prabhu directorial Naga Chaitanya starrer Custody Teaser

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

‘மன்மதலீலை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்கு ‘கஸ்டடி’ என பெயரிடப்பட்டுள்ளது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி?: ‘காயம்பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டுபோகும்’ என பின்னணி குரல் ஒலிக்க தொடங்கும் டீசர் ‘காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு’ என்ற கேஜிஎஃப் வசனத்தை லைட்டாக நினைவூட்டுகிறது. கதையை கணித்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் கட் செய்யப்பட்டுள்ள டீசரில் அரவிந்த் சாமியின் மாஸ் மூவ்மெண்ட்ஸ் ஈர்ப்பு.

கீர்த்தி ஷெட்டிக்கு சண்டைக்காட்சி புதுமை. ‘எ வெங்கட் பிரபு ஹண்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ள டீசரில் நாக சைதன்யாதான் முழுமைக்கும் நிறைந்திருக்கிறார். பின்னணியில் வரும் வாய்ஸ் ஓவரின் தமிழ் உச்சரிப்பு ‘இது பைலிங்குவல்’ படம் என்பதை துருத்திக்கொண்டு நினைவூட்டுகிறது. படம் வரும் மேமாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டீசர் வீடியோ:

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles