Nagini Serial Fame Mouni Rai One other Scorching Video From Miami Seaside Publish In Instagram

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான மௌனி ராய் இந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். டப்பிங் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இந்த சீரியலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக உருவெடுத்த கேஜிஎப் 1 திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தார் மௌனி ராய். அதன்பின் ரன்பீர் கபூர், அலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மௌனி ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 


மியாமி பீச்சில் மௌனி ராய் :

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய் தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து தன் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் மௌனி ராயின் லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது. மியாமி பீச்சில் இருந்து கடலின் அலைகளின் நடுவே நீச்சல் உடையில் நடந்து வருவது போன்ற  வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மௌனி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இயற்கையில் அழகைவிட மௌனி பேரழகு என வர்ணித்து அவரது ரசிகர்கள் இதயங்களைப் பறக்கவிட்டு இந்த வீடியோவை இன்ஸ்டாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles