Kanchipuram Drunk Brothers Battle Due To Household Dispute Close to Walajabad | Crime: குடிபோதையில் அண்ணனை கட்டையால் அடித்து கொன்ற தம்பி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திம்மையன்பேட்டை ஊராட்சி கீழ் தெருவில் வசிப்பவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன் திருமணம் ஆன நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் குடித்துவிட்டு தம்பி வடிவேலு வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளார்.

 

குடிபோதையில் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. கைகலப்பில் சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்து விட்டதால் கோபமடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே துடி துடித்து உயிரிழந்து உள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதை தகராறு காரணமாக கோபத்தில் தம்பியே அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles