நானி – கீர்த்தி சுரேஷ் இணையும் தசரா ட்ரெய்லர் எப்படி? | nani keerthy suresh dasara film trailer out now pan india

சென்னை: நானியின் நடிப்பில் உருவாகி உள்ள தசரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் 2.12 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சில கவனம் பெறுகின்றன. “பத்து தல இருக்குறவன் ஒத்த தல இருக்குறவன் கிட்ட நாய் மாதிரி அடிபட்டு செத்தான்” என ஒரு வசனம் வருகிறது. நானி, இதுவரை திரையில் பார்த்திடாத மாறுபட்ட உடல் மொழி மற்றும் நடிப்பால் மிரட்டுகிறார்.

இந்தப் படம் வரும் 30-ம் தேதி இந்திய அளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர உள்ளது. படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளதாக தகவல். படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது.

ட்ரெய்லர் லிங்க்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles