சென்னை நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 2ஆம் தேதி 23 வயதான மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்று (மார்ச் 11) மதியம் 3 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள வீட்டில் வைத்து காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.