சிறு வயது புகைப்படங்களைப் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்
11 மார், 2023 – 12:12 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில், ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு, “சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘தசரா’ இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து சிரஞ்சீவி தங்கையாக ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பேலா சங்கர்’ படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதிக்கு இன்று பிறந்தநாள். அதற்கு வாழ்த்து தெரிவித்து இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். “எனது கேலரியில் இருந்து இந்த அழகான நினைவுகள் மூலம், உங்களது பிறந்தநாளில் உங்களுக்கு நிறைய அன்பு, அரவணைப்பு, அன்பான வாழ்த்துகளை அனுப்புகிறேன். அக்காவே, உங்கள் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக இருக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார்.