Pandian Shops : இனிவரும் கதையில் அந்த ரோல் சரியில்லை… விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையில்  நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தலைவிகளின்  மிகவும் பேவரட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு ஆண்டுகளை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

<determine class="picture">

வைஷாலி – விஜே தீபிகா – சாய் காயத்ரி – சரவண விக்ரம்

</determine>

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடக்கம் முதல் ஏதாவது ஒரு கதாபாத்திரம் மாற்றப்பட்டு கொண்டே வருகிறது. ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில்  மூன்று பேரும் ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் மூன்று  பேரும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தது நடிகை வைஷாலி. அவர் ஒன்று இரண்டு எபிசோட்களில் மட்டுமே நடித்து பின்னர் விலகிய பிறகு விஜே தீபிகா ஐஸ்வர்யாவானார். சில காரணங்களால் அவர் விலகிய பிறகு தற்போது வரை சாய் காயத்ரி நடித்து வந்தார். நன்றாக தான் போய்க்கொண்டு இருந்த இந்த வேளையில் திடீரென சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். ‘ஐஸ்வர்யாவாக நான் இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க போவதில்லை. இனி இந்த சீரியலில் வரும் கதைக்களம் எனக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை, என்னடைய கேரியருக்கு நியாயம் செய்யும் வகையிலும் இல்லை என்பதால் நான் அதில் இருந்து விலகுகிறேன். இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து சம்மதம் தெரிவித்த விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது நன்றிகள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவிட்டுள்ளார் சாய் காயத்ரி.

மேலும் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முன்னர் நடித்த விஜே தீபிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles