Actor Vijay Sethupathi Appreciated Me For Appearing Efficiency In Viduthalai Film | Viduthalai: “முத்தமழை பொழிந்த நடிகர் விஜய்சேதுபதி”

விடுதலை படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு தன்னுடைய குடும்பமே நன்றி சொல்வதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்  ‘விடுதலை’.  இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் முறையாக  வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விடுதலை படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா தலைமையேற்று படக்குழுவினரோடு இணைந்து பாடல் வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் சூரியின் பெயரை சொன்னப் போது ஆர்ப்பரித்தனர். இதனை மேடையில் பேசிய அனைவருமே குறிப்பிட்டு சூரியின் வளர்ச்சியை பாராட்டினர். 

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய சூரி, அண்ணன் வெற்றிமாறன் மற்றும் மாமா விஜய்சேதுபதியின் ரசிகர்கள் தான் என்னுடைய ரசிகர்கள் என கூறி நெகிழ்ந்தார். இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய வெற்றிமாறனுக்கு என் குடும்பமே வந்து நன்றி சொல்லிருக்கணும். அப்படி அழைத்து வந்தால் குடும்ப விழாவாக போய்விடும் என்பதால் யாரும் வரவில்லை. எனக்கு பெரிய பாதையை உருவாக்கி விட்டு இருக்கீங்க. மேலும், நமக்கும் கைதட்டல் வேண்டும் என்று நான்கு பேரை வரச்சொன்னேன். ஆனால் தயாரிப்பாளரை பேச விடாமல் பண்ணீட்டீங்களே. காமெடியனாக நிறைய மேடைகள் ஏறியுள்ளேன். முதல்முறையாக கதை நாயகனாக இந்த மேடை கிடைத்துள்ளது என சூரி தெரிவித்தார். 

இளையராஜா இசையில் நான் நடித்தது எனது பெற்றோரின் பெரும் புண்ணியம் என்று நினைக்கிறேன். சினிமாவில் மற்ற நடிகர்களை வாழ்த்தி முன்னேற்றுவது நான் பார்த்தவரை விஜய் சேதுபதி மட்டும் தான். விடுதலை படத்தின்‌ காட்சிகளை பார்த்து எனக்கு போனில் மாறி மாறி முத்தம் கொடுத்தார். இருவரும் ஒன்றாக வாய்ப்பு தேடியவர்கள் தான். வெண்ணிலா கபடி குழு படம் பார்த்துவிட்டு நீ காமெடியன் மட்டும்தான் என்று நீயே‌ முடிவு பண்ணாத, நீ ஒரு குணச்சித்திர நடிகர் என்றார்.

இந்த படத்தின் நான் நடிக்கப்போகிறேன் என சொன்னவுடன் வெற்றிமாறனுக்கு விஜய் சேதுபதி நன்றி சொன்னார். கடைசிவரைக்கும் நடிகராக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. சமீப காலமாக நடிகருக்கு இணையாக இயக்குநர்களையும் ரசிக்கும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அந்த இயக்குனர்களில் முதன்மையானவர் வெற்றிமாறன் எனவும் நடிகர் சூரி தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles