Final Up to date : 08 Mar, 2023 07:32 PM
Revealed : 08 Mar 2023 07:32 PM
Final Up to date : 08 Mar 2023 07:32 PM

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 1981-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘ராஜபார்வை’ திரைப்படம் தான் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான முதல் படம். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்களை தயாரித்த இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘விக்ரம்’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்தான அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 56-ஆவது தயாரிப்பாக உருவாகும் இப்படம் தொடர்பான அறிவிப்பில் ‘ப்ளட் அன்ட் பேட்டல்’ (BLOODandBATTLE) என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படங்களுக்குப் பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் படமாக இது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ‘எஸ்டிஆர்48’ என அழைக்கப்படும் இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
See you on the battlefield at 6.30 pm tomorrow. #BLOODandBATTLE#RKFIProductionNo_56 #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #Mahendran @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/4KFZGSXbxS
தவறவிடாதீர்!