Kaniha Well being : 'எதிர்நீச்சல்' ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு? கனிஹா கொடுத்த அதிர்ச்சி அப்டேட்.. பதறிய ரசிகர்கள்..

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர் நீச்சல். திருச்செல்வம் இயக்கும் இந்த தொடரில் ஹரிப்ரியா, கனிகா, பிரியதர்ஷினி, மாரிமுத்து மற்றும் பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மிகவும் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்ட இந்த சீரியல் 300 எபிசோட்களையும் தாண்டி இன்றும் விறுவிறுப்பாக நகர்கிறது.

<robust>டிஆர்பி ரேட்டிங்:</robust>

கூட்டுக் குடும்பமாக வாழும் ஒரு குடும்பத்தில் மருமகள்களாக வரும் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். புதிதாக திருமணமாகி வரும் ஒரு பெண் அந்த அடிமை தனத்தை எதிர்த்து போராடுகிறார். இந்த சீரியலில் வரும் சம்பவங்கள் பலவற்றை தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது எதிர் நீச்சல் தொடர்.

<robust>சின்னத்திரையில் ஃபைவ் ஸ்டார் நாயகி :</robust>

பரபரப்பாக நகர்ந்து வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கனிஹா. நடிகர் பிரசன்னா ஜோடியாக ‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை கனிகா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை கனிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தலைகாட்டவில்லை. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் நடித்த கனிஹா தற்போது சின்னத்திரை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், அடுத்தாக நடிகைகள் களம் இறங்குவது சின்னத்திரையில்தான். ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு போன்ற நடிகைகளின் பட்டியலில் கனிஹாவும் இணைந்து விட்டார். தற்போது எதிர் நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

<robust>காலில் எலும்பு முறிவு :</robust>

மிகவும் பிஸியாக நடித்து வந்த கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த போஸ்ட்டுக்கு இந்த புதிய பூட்ஸை அணிந்து வாழ பழகிக்கொள்கிறேன், ஒரு வாரம் முடிந்தது, இன்னும் ஐந்து வாரங்கள் உள்ளன என பதிவிட்டுள்ளார். விரைவில் குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles