காதலன் தாக்கியதில் நடிகை படுகாயம் – Anicka Vikhraman significantly injured when her boyfriend attacked

காதலன் தாக்கியதில் நடிகை படுகாயம்

07 மார், 2023 – 13:40 IST

எழுத்தின் அளவு:


வளர்ந்து வரும் இளம் நடிகை அனிகா விக்ரமன். கேரளாவை சேர்ந்த இவர் நடிகைகள் அம்பிகா, ராதாவின் நெருங்கிய உறவினர். இவர் தமிழில் ‘க்’ என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது கன்னட, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அனிகா விக்ரமன் தனது முன்னாள் காதலன் அடித்து காயப்படுத்தி துன்புறுத்தியதாக பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். தனது முகம், கண், தோள்பட்டையில் காயத்தோடு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் அனூப் என்பவரை காதலித்தேன். அவர் பல வருடங்களாக மனதாலும், உடலாலும் என்னை சித்ரவதை செய்தார். முதலில் என்னை அடித்து கொடுமைப்படுத்தியபோது, வெளியே சொல்ல நினைத்தேன். ஆனால் காலில் விழுந்து கெஞ்சி சமாதானப்படுத்தினார். பிறகு மீண்டும் என்னை அடித்து உதைத்தார். என் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் நான் பெங்களூரு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அதை அனூப் பணத்தால் சரிகட்டி தப்பித்து விட்டார்.

நான் அவரை விட்டு விலக தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாக இல்லை. நான் படப்பிடிப்புக்கு செல்வதை தடுத்தார். என் செல்போனை உடைத்தார். என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். அதிர்ச்சியில் இருந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அதை சும்மா விட முடியாது. ஆனால் என்ன செய்வது என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தெரியவில்லை.

இந்த உலகம் மிகவும் இருண்டது என்பதை இப்போது கனத்த இதயத்துடன் உணர்கிறேன். தங்களை நண்பர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர், மனிதத்தை விட பணமே பெரியது என்பதை எனக்கு உணர்த்தினார்கள். இந்த சம்பவம் குறித்து நான் போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். எனக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. அவருடைய எல்லா மிரட்டல்களையும் இப்போது பதிவு செய்கிறேன். உடல் உபாதையிலிருந்து இப்போது மீண்டு வருகிறேன். மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறேன். இவ்வாறு அனிகா விக்ரமன் எழுதியிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles