உடையிலும், உரையிலும் பரபரப்பு கிளப்பிய கோமல் சர்மா

உடையிலும், உரையிலும் பரபரப்பு கிளப்பிய கோமல் சர்மா

28 பிப், 2023 – 11:50 IST

எழுத்தின் அளவு:


சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. பிரகாஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் ஒரு மாலில் திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் சதீஷ், ஷீலா ராஜ்குமார், கோமல் சர்மா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு கோமல் சர்மா அணிந்து வந்த உடைதான் ஹைலைட். அதோடு அவர் விழாவில் ஆற்றிய உரையும் பரபரப்பு கிளப்பியது.

விழாவில் அவர் பேசியதாவது: குடிமகான் என டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக இந்த நிகழ்வில் நான் குடிமகன்களுக்கு அறிவுரை எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள். உங்களுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள் அப்படி யாரேனும் இருந்தால் இதுபற்றி அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்து உயர்வது நல்ல விஷயம். அதை செய்து பாருங்கள். என்று கேட்டுக்கொண்டார். குடிமகன்களை உயர்ந்த மனிதர்களாக சித்தரித்த அவர் பேச்சும் அவரது உடை போலவே பரபரப்பை கிளப்பியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles