அரசியல் எஜமானர்களுக்கு கீழ்ப்படியும் சிபிஐ அதிகாரிகள்..சிசோடியா கைது விவகாரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து..

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.

<robust>டெல்லி மதுபானக் கொள்கை:</robust>

அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.

இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.

துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.

<robust>அரசியல் உச்சக்கட்டம்:</robust>

இதையடுத்து, அரசியல் பதற்றத்தின் உச்சக்கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிஷ் சிசோடியாவை கைது செய்ய பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

<robust>சிபிஐ அதிகாரிகள் குறித்து பரபரப்பு கருத்து:</robust>

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் மணீஷ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக என்னிடம் கூறினர். அவர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால், அவரைக் கைது செய்வதற்கான அரசியல் அழுத்தம் மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது" என பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாகவே, எதிர்க்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பாஜக தங்களின் அரசுகளை அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது.

<robust>சிவசேனா விவகாரம்:</robust>

அதேபோல, மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது. பாஜகவின் துணையோடு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சரானார்.

இதையடுத்து, தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு கட்சி மாற 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அளிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles