தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் அஜித். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அடுத்த படத்திற்கான பணியில் தீவிரமாக உள்ளார். நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித் – ஷாலினிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். பின்னர், 2015ம் ஆண்டு ஆத்விக் பிறந்தார்.

அஜித் ஒரு நடிகராக மட்டுமின்றி பைக் பந்தய வீரர், கார் பந்தய வீரர், ட்ரோன் தொழில்நுட்பம், துப்பாக்கிச்சுடும் வீரர் என்று பன்முகத்தன்மை கொண்ட நபராக உள்ளார். அவரது மகன் ஆத்விக் தற்போது சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். 7 வயதே ஆன ஆத்விக் தற்போதே கால்பந்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் தாய் ஷாலினியுடன் ஆத்விக் மற்றும் இதர மாணவர்கள் இணைந்து சென்னையின் எஃப்.சி. சீருடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பு ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் குடும்ப படங்களும், அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களும் மிகவும் அரிதாகவே வெளிவரும். அந்த வகையில் கால்பந்து சீருடையில் ஆத்விக்கின் படம் வெளியானதை குட்டி தல என்று பதிவிட்டு பல ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கால்பந்து சீருடையில் உள்ள ஆத்விக்கிற்கு கப்பு முக்கியம் பிகிலு என்றும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் மகள் அனோஷ்கா தற்போது பள்ளியில் படித்து வருகிறார்.

சினிமா, அரசியலில் பெரும்பாலும் அதில் முன்னணியில் உள்ளவர்களின் வாரிசுகள் தங்களது தந்தை சார்ந்த துறையிலேதான் வருவது வழக்கமாக உள்ளது. வெகு அரிதாக சிலரின் வாரிசுகள் மட்டுமே வேறு துறைகளுக்கு செல்கின்றனர். நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டு வீரராக வலம் வரப்போகிறாரா? அல்லது திரைத்துறையில் தந்தையை போல தடம்பதிப்பாரா? அல்லது தந்தை அஜித்தை போல பன்முக கலைஞராக உலா வருவாரா? என்றும் காலம்தான் பதில் சொல்லும். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மாதவனின் மகன் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ்சிவன் நீக்கப்பட்ட பிறகு, அவரது படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், அதற்கான பூஜை நடைபெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் ரசிகர்கள் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Nawazuddin Siddiqui : மைனர் குழந்தைகள் எங்கே? விவாகரத்தான மனைவி மீது நவாசுதீன் வழக்கு… தொடரும் பிரச்சனை

மேலும் படிக்க: MohanG To Ameer : கடன் வாங்கி படம் எடுத்தேன்…கருத்தை பின் வாங்குங்க… பகாசூரன் பட சர்ச்சை… இயக்குநர் அமீருக்கு மோகன்ஜி பதிலடி!