காஷ்மீரிலிருந்து லெஜண்ட் சரவணன் வெளியிடப்போகும் முக்கிய அப்டேட்… ஒருவேளை இருக்குமோ! #LEO

இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய அப்டேட்டுகளை வெளியிடப்போவதாக, காஷ்மீரில் இருக்கும் தனது புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்ஸ், ஒருவேளை விஜய்யின் ‘லியோ’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் அவர் வருகிறாரோ என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிய இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி நடித்திருந்தனர். அவர்களுடன் விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

image

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், இந்தப் படம் ஆரம்பித்தது முதல் திரையரங்குகளில் வெளியானது வரை எல்லாமே சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்தது. இதனைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் தனது அடுத்தப் படம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடாத நிலையில், காஷ்மீரில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் இருந்து காணொலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 21-ம் வெளியிட்டு இருந்தார். அதில் ‘காஷ்மீரில் லெஜண்ட்’ என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று, “உங்கள் காத்திருப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது. சுவாரஸ்யமான அட்டேட்டுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும்” என்று பனிப்படர்ந்த காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களுடன் லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை காஷ்மீரில் இருக்கும் ‘லியோ’ படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில், லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 20 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீருக்கு சென்றுள்ள லெஜண்ட் சரவணன் முக்கிய அப்டேட் என்று குறிப்பிட்டுள்ளதை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இவையாவும் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், தி லெஜண்ட் படத்தின் ஓடிடி அப்டேட்டோ என்றும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்புமே எதுவும் கூறாத நிலையில் விரைவில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என நம்பலாம்.!

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles