மேகாலயா தேர்தல்:
மேகாலயா மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ், தேசிய ஜனநாயக கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் பேசிய அவர், யாரையும் மதிக்காத போக்குடன் பாஜக செயல்படுகிறது. மேகாலயா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மொழி உள்ளிட்டவைகளை அழிக்க பாஜகவை காங்கிரஸ் கட்சி விடாது.
பாஜகவின் பி டீம்:
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீமாக செயல்படுகிறது. கோவா மாநிலத்தில் எப்படி வாக்குகளை பிரித்து பாஜகவை ஆட்சிக்கு வர வைத்ததோ, அதையே மேகாலயாவிலும் செய்ய பார்க்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
Congress’ inclusive imaginative and prescient for a #5StarMeghalaya will take all of the individuals of this stunning state ahead, collectively. pic.twitter.com/OeOf3lWlGb
— Rahul Gandhi (@RahulGandhi) February 22, 2023
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா , “திரிணாமுல் கடந்த 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்துப் போராடி வருகிறது, நாங்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றுள்ளோம்,”
”நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை”
நாங்கள் தேசிய கட்சி, அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட தகுதி உண்டு. மேலும், பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
மேலும் படிக்க: OPS Press Meet: தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் – ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி