”மயில்சாமியின் இடத்திலிருந்து அவரது குழந்தைகளை அரவணைப்போம்” – நடிகர் சங்கத் தலைவர் நாசர் | we are going to maintain actor mayilsamy children says nadikar sangam president nassar

‘மயில்சாமியின் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. அவரது ஸ்தானத்திலிருந்து அவரது குழந்தைகளை அரவணைப்போம்” என நடிகர் சங்கத்தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுக்க விழித்திருந்து பக்தி பரவசத்துடன் வலம் வந்த நடிகர் மயில்சாமி, அதிகாலையில் வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார். 57 வயதான அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நேரில் சென்று மயில்சாமிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் நாசர் தெரிவிக்கையில், “மயில்சாமி எவருக்கும் தீங்கு நினைக்காதவர். தன்னுடைய தகுதிக்கு மீறி உதவிகளை செய்பவர். தப்பு என்று தெரிந்தால் முகத்துக்கு நேராக சொல்பவர். அவரது குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயது. அவருடைய ஸ்தானத்திலிருந்து அவரது குழந்தைகளை அரவணைப்போம்” என்று உறுதி தெரிவித்திருக்கிறார். மயில்சாமியின் குழந்தைகளை அரவணைக்க முன்வந்திருப்பது பொதுவெளியில் வரவேற்பு பெற்றிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles