BCCI : ஊக்கமருந்து விவகாரம்.. சர்ச்சையை கிளப்பிய சேத்தன் சர்மா.. பதவி இனி என்னாகும்..?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வுக்குழு தலைவரும், அணியின் முன்னாள் வீரருமான சேத்தன் ஷர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஸ்டிங் ஆபரேஷன் தகவல்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்நிலையில், அனுபவ கிரிக்கெட் வீரர்களோ, இளம் வீரர்களோ அவரிடம் பேசுவதில்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

சேத்தன் ஷர்மா இந்திய அணியில் நடந்த விவகாரங்கள் பற்றியும், இந்திய வீரர்கள் பற்றியும் சமீபத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில், ’ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் பேசிவிட்டு செல்வார்கள். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசும். ஆனால், அவை என் வீட்டை விட்டு வெளியே வராது’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு பி.சி.சி.ஐ. மறுப்பு தெரிவித்துள்ளது. சேத்தன் ஷர்மா அளவுக்கு அதிகமாக பேசி வருவதாக தெரிவித்துள்ளது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் – இவர்களில் யாரேனும் பயிற்சி வேளைகளிலோ, பொதுவெளியிலோ சேத்தன் ஷர்மாவுடன் பேசியதைப் பார்த்துள்ளீர்களா? ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின்போது, மைதானத்தில் சேத்தன் ஒரு பகுதியில் இருப்பார். விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். இது அனைவரும் அறிந்ததே! என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

சேத்தன் ஷர்மாவின் இந்தச் செயலினால், அவர் மீதான நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போய்விட்டதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவின் தலைவராக சேத்தன் ஷர்மா நீடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

<sturdy>சேத்தன் சர்மா யார்?</sturdy>

இவரை தேர்வுக்குழு தலைவராகவும், சிறந்த வர்ணனையாளராகவும் அறிந்த இன்றைய ரசிகர்கள் பலருக்கும் இவர் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் என்பதையும் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

<sturdy>சேத்தன்சர்மா:</sturdy>

1966ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்தவர் சேத்தன் சர்மா. வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தன்னுடைய 17வது வயதிலே இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு பெற்றார். தன்னுடைய 19வது வயதிலே இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலே மோஷின்கானை அவுட்டாக்கினார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரிலே விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் என்ற சாதனையை சேத்தன்சர்மா படைத்துள்ளார். இந்திய அணிக்காக முதல் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவுடன் இணைந்து 5 ஆண்டுகள் வேகப்பந்துவீச்சில் கூட்டணி அமைத்து வீசியுள்ளார். 1985ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது 3 டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியபோது இவரை அனைவரும் திரும்பிபார்த்தனர். பின்னர், அடுத்தாண்டே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

<sturdy>பேட்டிங், பவுலிங்:</sturdy>

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அசத்தி வந்த சேத்தன்சர்மா 1989ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய சேத்தன்சர்மா 1994ம் ஆண்டு வரை விளையாடினார்.

<sturdy>தேர்வுக்குழு தலைவர்:</sturdy>

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக மிகவும் புகழ்பெற்றார். பின்னர், ஹரியானாவில் 2004ம் ஆண்டு வேகப்பந்துவீச்சுக்கு என்று ஒரு அகாடமி உருவாக்கினார். கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய சேத்தன் சர்மா 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன்சமாஜ் சார்பில் களமிறங்கினார். அந்த தேர்தலில் 18.2 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடமே பிடித்தார். பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் விளையாட்டு பிரிவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர், கடந்த 2020ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மாவின் உறவினர்தான் சேத்தன் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles