பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று காதலர் தினம் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் தனது அன்பானவர்களுக்கு வாழ்த்துக்கள், சர்ப்ரைஸ் கிப்ட், கிரீட்டிங் கார்டு, சாக்லேட் என ஒருவருக்கொருவர் பல விதங்களிலும் அவர்களின் அன்பை பரிமாறி வருகிறார்கள்.
காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் திரை பிரபலங்களை மிஞ்ச முடியுமா என்ன? ஏராளமான திரை பிரபலங்கள் அவர்களின் அன்பானவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் மிகவும் அழகான தம்பதிகள் அஜய் தேவ்கன் – கஜோல் ஜோடி.
பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு திரைப்படம் மூலம் ரசிகர்கள் மீது மின்சாரத்தை கண்களால் தாக்கிய நடிகை. உயர் மின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் இன்றும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கிறார்கள். பாலிவுட் முன்னணி ஹீரோவாக இருந்த அஜய் தேவ்கன் – கஜோல் காதல் ஜோடிகளாக கலக்கியவர்கள் பின்னர் திருமணம் முடிந்து தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
காதலர் தினமான இன்று நடிகர் அஜய் தேவ்கன் சோசியல் மீடியா மூலம் தனது அன்பின் வெளிப்பாடாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் அவர்களின் ரசிகர்கள் சற்று கடுப்பாகி உள்ளனர். காரணம் அவர் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தது கஜோலுக்கு அல்ல என்பது தான். அஜய் தேவ்கன் தனது பதிவில்
“முதல் பார்வையில் காதல் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் வழியில் எங்கோ, மெதுவாக ஆனால் நிச்சயமாக என் ஆவேசமாக கேமரா மீது எனது காதல் பரவியது. இந்த #காதலர் தினத்தை என்னை உற்சாகப்படுத்த தவறாத ஒன்றுக்காக அர்ப்பணிக்கிறேன். எனது உலகப் பார்வையை மேம்படுத்திய அன்பு கேமராவுக்கு நன்றி”
I don’t know whether or not it was ❤️ at first sight. However someplace alongside the best way, the digicam slowly however certainly grew to become my obsession. Dedicating this #ValentinesDay to one thing that by no means fails to excite me. Thanks pricey digicam for enhancing my world view. https://t.co/ormS6gS0Us
— Ajay Devgn (@ajaydevgn) February 14, 2023
இந்த போஸ்டை பகிர்ந்த அஜய் தேவ்கன் அதனுடன் அவர் இயக்கி வரும் “போலா” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது அவரின் கேமரா மீது அவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தினாலும் அவரின் அன்பு காதலி, மனைவி கஜோலுக்காக எந்த ஒரு பதிவும் இல்லையே என கடுப்பாக்கிய அவரின் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள். இதற்கு ஏராளமான கமெண்ட்களையும் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.