<p>ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>
<p>ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் பணியாற்றி வந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு அந்த பதவியில் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>