Tirupathi Tirumala Particular Entry Darshan Seniorcitizens Bodily Challenged Quota February Month

சிறப்பு தரிசனம்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்பதிவு:

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tirumala Tirupati Devasthanams(Official Reserving Portal) (ap.gov.in) என்ற தளத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்,ரூ.300 செலுத்தும், சிறப்பு தரிசனுத்துக்கு பிப்ரவரி மாதத்தில் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிகள் வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tirumala Tirupati Devasthanams(Official Reserving Portal) (ap.gov.in) என்ற தளத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles