TN Climate Replace: தென்தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழக பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/zwNKaswPWj

— Tamilnadu Climate-IMD (@ChennaiRmc) February 7, 2023

07.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.09.2023 முதல் 11.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

pic.twitter.com/xHNx0HEKsk

— Tamilnadu Climate-IMD (@ChennaiRmc) February 7, 2023

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும்  ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,757FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles