நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு டோலிவுட்டை தாண்டி கோலிவுட்டிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஒரு பட்டாளம் சேர்ந்தது. பின்னர் புஷ்பாவால் அது இன்னும் அதிகமானது. இளைய தளபதி ஜோடி கட்டிய பின்னர் தமிழ்நாட்டில் ராஷ்மிகாவுக்கு இன்னும் பெரிய படையே சேர்ந்துவிட்டது.
க்யூட்டான ராஷ்மிகா சுடச் சுட ஒரு அட்வைஸ் சொல்லியுள்ளார். ட்விட்டரில் அவர், மகிழ்ச்சியா இருங்க மக்களே… நம்பிக்கையோட இருங்க. உங்களோடு மகிழ்ச்சியும், மன அமைதியும் தான் எல்லாத்தையும்விட முக்கியம். வாழ்க்கை ரொம்ப சின்னது. அதனால அதுல நெகடிவ் எண்ணங்கள் வேண்டாமே என்று பதிவிட்டுள்ளார்.
Be blissful peeps.. maintain hope..
your happiness and peace comes above all… Life is simply too brief for damaging feels❤️😚 pic.twitter.com/QHHeYAtvQY
— Rashmika Mandanna (@iamRashmika) February 7, 2023
கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் ரிலீசாக வெளியான வாரிசு படம் குடும்பப் பாசம் – ஆக்ஷன் கலந்த கலவையாக விஜய் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, சம்யுக்தா என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
வாரிசு படத்தின் பாடல்களும் பட வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் ஒரு ரவுண்ட் வந்துவிட்டன. கூடவே ராஷ்மிகாவின் புகழும் ஃபேன் க்ளப்பும் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் தான் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகிழ்ச்சியா இருங்க மக்களே… நம்பிக்கையோட இருங்க. உங்களோடு மகிழ்ச்சியும், மன அமைதியும் தான் எல்லாத்தையும்விட முக்கியம். வாழ்க்கை ரொம்ப சின்னது. அதனால அதுல நெகடிவ் எண்ணங்கள் வேண்டாமே என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ராஷ்மிகாவின் ஃபிட்நஸ் ட்ரெயினிங் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது. நிறைய பெண் ஆளுமைகளைப் பார்த்து ஆசைப்பட்ட நான் இன்று ஒரு ஆளுமையாக வளர்ந்துவிட்டேன் என்று தனக்குத் தானே சர்டிஃபிகேட் கொடுத்திருந்தார்.