சமந்தாவின் ‘சாகுந்தலம்’ பட ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் – படக்குழு அறிவிப்பு!

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ருத்ரமாதேவி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் படக்குழுவினர் பீரியட் படமாக எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரவேற்பு பெற்றது. அத்துடன், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘சாகுந்தலம்’ படத்தின் டப்பிங் மற்றும் 3D தொழில்நுட்ப பணிகள் முடிவடையாமல் இருந்த நிலையில், படத்தின் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றதுடன், பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ‘சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

‘சாகுந்தலம்’ படத்தில் அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, கௌதமி, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். மேலும் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்கா இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலையின் மகனாக இளவரசன் பரதனாக, அல்லு ஆர்கா நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சாய் மாதவ் வசனங்கள் எழுதியுள்ளார். நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ளார். சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Supply : WWW.TAMILFUNZONE.COM

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles