பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பர்வேஸ் முஷாரஃப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Former President of Pakistan, Basic Pervez Musharraf (Retd) passes away after a chronic sickness, at a hospital in Dubai: Pakistan’s Geo Information pic.twitter.com/W1fGRVb6xZ
— ANI (@ANI) February 5, 2023
1943 – சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தவர் பர்வேஸ் முஷாரஃப். தேச பிரிவினையின்போது முஷாரஃப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது. 1964ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரஃப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.
அதை தொடர்ந்து, 1999 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கடந்த 2008 வரை பொறுப்பு பகித்தார்.