சாதி மதம் போன்ற வேறுபாடுகளை அகற்றிவிட்டு மனிதர்களை மனிதர்களாக நேசிக்க வேண்டும். அன்பை அனைவரிடத்திலும் பகிர்வதை விரும்பும் நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் இன்று ஒரு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
அன்பால் இணைந்த ஜோடி :
சாத்திரங்கள் பார்க்காமல், ஆடம்பரம் இல்லாமல், சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணத்தை சுயமரியாதை என அழைப்பார்கள். நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற பொது செயலாளரான ஜெ.குமரனுக்கு இன்று சாதிமத பேதமின்றி அன்பால் இணையும் சுயமரியாதை திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் @kumaran_VSP அவர்களுக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் 💐💐
சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம்
அன்பால் இணையும் விதமாக தன் வாழ்வின் இணையை, சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளார்.@VijaySethuOffl ❤️ pic.twitter.com/dfR3Obk77p
— MakkalSelvan FansClub (@MakkalSelvanFC) February 3, 2023
விஜய் சேதுபதி தலைமை தாங்கிய சுயமரியாதை திருமணம் :
நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் ஜெ. குமரன். அவருக்கு அன்பால் இணையும் விதமாக தனது வாழ்க்கைத் துணையுடன் இணையும் சுயமரியாதை திருமணம் ஆடம்பரம் இல்லாமல் அமைதியான முறையில் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தலைமை தாங்கி மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினார். மேலும் இந்த சுய மரியாதை திருமணத்தில் விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸியும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் அவரின் இந்த செயலை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி வளர்ச்சி :
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி வளர்ச்சி அபரிவிதமானதே. இயல்பான நடிப்பால், பெருவாரியான ரசிகர் கூட்டத்தை தக்க வைத்த விஜய் சேதுபதி, தான் ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் பயணிப்பது தான், அவரது ப்ளஸ் பாய்ண்ட். புதிதாய் அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட தயங்கும், வில்லன் கதாபாத்திரத்தை துணிந்து, விரும்பி ஏற்பதும் விஜய் சேதுபதி ஒருவர் மட்டுமே. ஒரே நேரத்தில் வில்லன், ஹீரோ என இரு காளையாக தன் சினிமா பயணம் எனும் மாட்டு வண்டியை இழுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான ஹீரோ என்றால் அது மிகையாகாது.