படமாகும் ராமாயணக் கதை – ராவணன் ஆகிறார் யாஷ்! | The story of Ramayana is being filmed – Yash turns into Ravana

ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். சைஃப் அலிகான், ராவணனாக நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 16-ல் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் 3டி தொழில் நுட்பத்தில், ராமாயணக் கதையை கொண்டு மற்றொரு படமும் உருவாகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஹிருத்திக் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால், ‘கே.ஜி.எஃப்’ நடிகர் யாஷிடம் ராவணனாக நடிக்கக் கேட்டுள்ளனர். அவர் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை என்கிறார்கள். நிதேஷ் திவாரி இயக்கும் இந்தப் படத்தை மது மன்டனா, அல்லு அரவிந்த் இணைந்து பான் இந்தியா முறையில் தயாரிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles