Rajinikanth: ரஜினிகாந்த் வெளியிட்ட பரபரப்பு நோட்டீஸ்.. இனிமேல் இதற்கெல்லாம் தடை

<sturdy>ரஜினிகாந்த் தரப்பு நோட்டீஸ்:</sturdy>

நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவரது பெயர், புகைப்படம் மற்றும்  குரலை பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என,  ரஜினிகந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

<sturdy>சட்டவிரோத பயன்பாடு:</sturdy>

அதில், சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்த் பல தசாப்தங்களாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து, பெரும் மதிப்புமிக்க நடிகராக வலம் வருகிறார். எண்ணற்ற ரசிகர்களின் அதரவுடன் பெரும் மதிப்பு மிக்க நபராக உள்ள அவரது நற்பெயருக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் அது ரஜினிக்கான பெரும் இழப்பாகும். நட்சட்திர அந்தஸ்தை கொண்ட அவருக்கு அதுதொடர்பான பல்வேறு உரிமைகளும் உண்டு. இந்நிலையில், பல்வேறு தளங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில், ரஜினியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் குரல் உள்ளிட்டவற்றை, சட்டவிரோதமாக பயன்படுத்தி பொதுமக்களிடையே விளம்பரம் செய்துகொள்வதாக தெரிய வந்துள்ளது.

<sturdy>சட்ட நடவடிக்கை பாயும்:</sturdy>

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவரது குரல், புகைப்படங்கள், பெயர் உள்ளிட்டவை தனித்துவமானது. அவற்றை சரியான ஒப்புதலின்றி பிறர் பயன்படுத்துவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ரஜினி தொடர்பான பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கு அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. வேறு யாருக்கும் அவற்றை பயன்படுத்த முடியது. எங்களது வலியுறுத்தலையும் மீறி ரஜினியின் பெயர், புகைப்படங்கள் மற்றும் குரல் உள்ளிட்டவற்றை, முன் அனுமதி இன்றி பயன்படுத்தினால், சட்டப்படி உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என,  ரஜினிகந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் திரைப்படம்:

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சற்று ஓய்வில் இருந்த ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பரபரப்பாக தயாராகி வரும் இப்படத்தை முடித்ததும், அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles