"எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார்" -உதயநிதி ஸ்டாலின்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணபுரம் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்று. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுகவின் மூத்த முன்னோடிகள் 1,400 பேருக்கு பொற்கிழிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சேலத்தில் எப்பொழுது வந்தாலும் வரவேற்பு பெரிதாகவும் எழுச்சியாகவும் இருக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள், பிரச்சாரத்திற்கு ஒரு பகுதியாக சென்றோம். மீண்டும் இந்த தவறை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது.

தமிழக முதல்வர் சேலம் மாவட்ட திட்டங்களை வழங்கி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் தான் வெற்றி பெற்றார்கள். அப்போது அமைச்சர் நேரு சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் முதல்வர் அமைச்சர் நேருவை சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார். திமுகவினர் கட்சி பணியில் ஈடுபட்டு திமுகவின் கோட்டை சேலம் என மாற்றி காட்ட வேண்டும். ஒவ்வொரு திமுக கட்சியினரின் வெற்றியும், மகிழ்ச்சி தான், மாவட்ட செயலாளரின் வெற்றி. சேலம் மாவட்டத்திற்கு சாதாரண உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தற்பொழுது அமைச்சராக வந்ததும் மறக்க முடியாத தருணமாக உள்ளது. 20 மாவட்டங்களில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தி முடித்துவிட்டுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்தி காட்டுவோம். சேலம் எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார். ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் உண்மையாக இல்லை, கட்சி தொண்டர்கள், தமிழக மக்களுக்கும் உண்மையாக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி உண்மையாக இருப்பது மோடி, அமித்ஷா, ஆளுநர் ரவி ஆகியோருக்கு மட்டும்தான். தமிழக ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை வைத்துவிட்டு மற்ற வார்த்தைகளை விட்டு படித்தார். இதனால் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநருக்கு முன்பாகவே மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓடிவிட்டார்கள். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று பயந்துவிட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியார், அண்ணா இவர்களை நேரில் பார்த்தது கிடையாது. கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் இவர்களுடன் பணியாற்றிய மூத்த முன்னோடிகள் உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன். மேலும் திமுக இளைஞரணி வைப்புத் தொகையிலிருந்து வரும் வட்டியினை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை திமுகவில் உள்ள மூத்த முன்னோடிகள் மருத்துவ செலவிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles