Actress Samantha Ruth Prabhu Talks About Following Strict Autoimmune Weight loss plan Amid Myositis Remedy – Watch Video

Watch Video Samantha: தனது டயட் குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தான், மயோசிடிஸ் எனும் நோயால் தான் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமந்தா அறிவித்து இருந்தார். அவ்வளவு தான் இனி சமந்தா சினிமா பக்கம் திரும்ப வரமாட்டார். படுத்த படுக்கை தான் என சினிமாவில் அவருக்கு போட்டியானவர்கள் உட்பட பலரும் நினைத்தனர்.  ஆனால், மற்றவர்களின் எண்ணங்களுக்கு சவுக்கு அடி கொடுப்பது போல், நோயால் சலைத்து போகாத சமந்தா,மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டு இருந்தார். 

சமந்தா மீதான விமர்சனம்:

அந்த வகையில், அவரது நடிப்பில் வெளியாக  உள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது சமந்தாவை பார்த்த பலரும், ரோய் பாதிப்பால் அவர் தளர்ந்து போய் விட்டார். அவர் தனது அழகையும் பளபளப்பையும் இழந்துவிட்டார்.  அதுமட்டுமில்லாமல் விவாகரத்திலிருந்து அவர் வலுவாக மீண்டு கொண்டு இருக்கிறார், அவர் சினிமாவில் தொட வேண்டிய உயரம் இன்னும் உள்ளது என அனைவரும் கூறினர். இதனால் அவர் மீண்டும் பலவீனமாகியுள்ளார் என பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கின.

விளக்கமளித்த சமந்தா:

இதற்கு பதில் அளித்து இருந்த சமந்தா, ”நான் செய்ததைப் போல நீங்கள் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுக்க வேண்டாம் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உங்கள் பிரகாசத்தை அதிகரிக்க என்னிடமிருந்து கொஞ்சம் அன்பு இருக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். 


வைரல் வீடியோ

மேலும் இது குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் உடற்பயிற்சி எடுக்கும் வீடியோவும், அதற்கு கேப்சனுமிட்டுள்ளார். அந்த கேப்சனில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

முடிந்தவரை கண்டிப்பான டயட் (ஆட்டோ இம்யூன் டயட்.. ஆம் அப்படி ஒன்று இருக்கிறது) எனக்குக் கற்றுக் கொடுத்தது என்பது பலம் என்பது  நீங்கள் சாப்பிடும் சாப்பட்டில் இல்லை.. நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதுதான் உங்களது பலம் 🫶🏻 என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாகுந்தலம் திரைப்படம்:


இதனிடையே, ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சமந்தா. ’சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த தேவ் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநரான குணசேகரன் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,823FansLike
3,755FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles